இலங்கையில் 14 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு சிறை தண்டனை!
மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.பீ.அன்பார் உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயது இளைஞர் தனது சொந்த குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான 14 வயதுடைய பாடசாலை மாணவி […]