அரசியல் இலங்கை

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: மொட்டு கட்சி எச்சரிக்கை!

  • November 25, 2025
  • 0 Comments

அச்சுறுத்தல்கள்மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்று அக்கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில் எமது நுகேகொடை கூட்டம் வெற்றியளித்தது. மக்களுக்காக எமது […]

அரசியல் இலங்கை

நுகேகொடை கூட்டம் வெத்து வேட்டு!

  • November 24, 2025
  • 0 Comments

நுகேகொடை கூட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையவில்லை என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தால் அரசாங்கம் கதிகலங்கி நிற்கின்றது என கூட்டு எதிரணியினர் எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கூறிவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். “ நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இதற்கு அஞ்சியே தமது சில சகாக்களை அழைத்துக்கொண்டு அவர்கள் கொழும்பு வந்துள்ளனர். இந்த கூட்டம் […]

அரசியல் இலங்கை

ஆட்சியைக் கவிழ்ப்போம்: நாமல் சபதம்! 

  • November 21, 2025
  • 0 Comments

“துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்காக கப்பல் நிர்மாணிக்கப்படுவதில்லை. அது ஆழ்கடலில் பயணித்தாக வேண்டும். புயல் வரும், சவால்களும் வரும். கௌரவ ஜனாதிபதி அவர்களே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்பதை உங்கள் அரசாங்கத்துக்கு நினைவு படுத்துகின்றோம். அதற்காகவே மக்கள் சக்தி கட்டியெழுப்படுகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி, அரசாங்கம் […]

அரசியல் இலங்கை

மொட்டு கட்சி பஸ்ஸில் ஏற தயாராகும் சஜித்தின் சகாக்கள்! 

  • November 13, 2025
  • 0 Comments

நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டாலும்கூட கிராமிய மட்டத்திலுள்ள அக்கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு கூறினார். “ நுகேகொடை கூட்டத்தில் எமது கட்சி ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் […]

அரசியல் இலங்கை

வரவு செலவு திட்டம்!! மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு

  • November 8, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் நிதியாண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ” மக்களை ஏமாற்றும் விதத்திலேயே வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ” குறுகிய காலப்பகுதிக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் வரவு- செலவுத் […]

அரசியல் இலங்கை

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்

  • November 7, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!