அரசியல் இலங்கை செய்தி

பிணையில் வந்தகையோடு என்.பி.பி. அரசுக்கு அர்ச்சுனா சிவப்பு எச்சரிக்கை!

  • December 24, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் ஓராண்டுக்குள் கவிழும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Arjuna). கொழும்பு கோட்டை பொலிஸாரால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட அர்ச்சுனாவுக்கு பிற்பகல் பிணை வழங்கப்பட்டது. பிணையில் வெளிவந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஏனைய சபைகளிலும் இந்நிலைமை ஏற்படலாம். முல்லைத்தீவிலும் என்.பி.பி. ஆட்சிக்கு பின்னடைவு […]

அரசியல் இலங்கை செய்தி

50 ஆண்டுகால அரசியலில் ரணில் இழைத்த பெரும் தவறு: வெளியான அறிவிப்பு!

  • December 24, 2025
  • 0 Comments

“ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா என்பது எனக்கு தெரியாது. இருந்தாலும் அவரின் அனுபவம் எமக்கு தேவை.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி Chaminda Wijesiri தெரிவித்தார். பதுளையில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருகின்றார் என வெளியாகும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த சமிந்த விஜேசிறி எம்.பி. (Chaminda Wijesiri) கூறியவ வருமாறு, […]

அரசியல் இலங்கை செய்தி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க தமிழ்க் கட்சிகள் போர்க்கொடி!

  • December 24, 2025
  • 0 Comments

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கப்படுவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Dr. Harini Amarasooriya) நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர எம்.பியிடம் நேர்காணலொன்றின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் வழங்கிய பதில் வருமாறு, “ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி (executive presidency) முறைமையை […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் புதிய சட்டம்: நீதி அமைச்சு கூறுவது என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு நகல் தொடர்பில் மக்களின் கருத்துகளை பெற்ற பின்னரே சட்டமூலம் இறுதிப்படுத்தப்படும்.” இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டவரைவு நீதியமைச்சின் இணையத்தில் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி சட்டவரைவு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. தனிநபர்களும், அமைப்புகளும் எதிர்வரும் பெப்ரவரி 28 […]

அரசியல் இலங்கை செய்தி

சுகாதார அமைச்சர் குறிவைப்பு: பதவி விலகுமாறு எதிரணி வலியுறுத்து!

  • December 20, 2025
  • 0 Comments

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. “தரமற்ற ஊசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்குரிய பொறுப்பை அமைச்சர் ஏற்கவேண்டும்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஞய பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்தபோது தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியே அன்றும் கதைத்தது. […]

அரசியல் இலங்கை செய்தி

ரூ.20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு வீட்டு கூரைகளை கழற்றிய அர்ச்சுனா எம்.பி.!

  • December 20, 2025
  • 0 Comments

“அனர்த்தத்தால் வீட்டுகூரை சேதமடைந்திருந்தால்கூட கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் எனக்கு அவ்வாறு எவ்வித கொடுப்பனும் கிடைக்கப்பெறவில்லை.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் நகைச்சுவை பாணியில் இவ்வாறு கூறினார். “ அனர்த்தத்தால் சேதமடைந்த வீட்டு கூரையொன்றுக்கு 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என ஆளுங்கட்சியால் அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனால் நான் எனது வீட்டில் இருந்த இரு கூரைகளை கழற்றினேன். 20 லட்சம் ரூபா கிடைக்கும் என நம்பினேன். ஆனால் […]

அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம்!

  • December 20, 2025
  • 0 Comments

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும். புதிய அரசமைப்பு ஊடாக அதற்குரிய நடவடிக்கை இடம்பெறும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் புதிய அரசமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கேள்விகளை எழுப்பி இருந்தார். மேற்படி கேள்விகளுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் நேற்று பதில்களை வழங்கினார். இதன்போது அவர் கூறியவை வருமாறு, “ புதிய அரசமைப்பு தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

குறைநிரப்பு பிரேரணைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

  • December 19, 2025
  • 0 Comments

500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான நிதியை பெறும் நோக்கிலேயே குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரியவால் நேற்று காலை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முற்பகல் முதல் மாலைவரை பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பின்றி குறைநிரப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி அங்கீகரிக்கப்பட்டது.

அரசியல் இலங்கை செய்தி

வைத்தியர் பெல்லன பணி நீக்கம்: சபையில் சஜித் கொந்தளிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டது அநீதியான நடவடிக்கை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (19) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியவை வருமாறு, “புதிய அரசமைப்பு இயற்றப்படும்போது கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் அவசியம். ஏனெனில் மருந்து மாபியா உட்பட சுகாதார சேவையில் நிலவும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: மீண்டும் வரிசை யுகம்! அரசு மறுப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

“பேரிடர் நிலையால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற அச்சமூட்டும் அறிவிப்புகளை நம்ப வேண்டாம்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வரிசை யுகம் ஏற்படாது, இலங்கை நிச்சயம் சிறப்பாக மீண்டெழும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். “பேரிடரால் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் நெருக்கடி நிலை ஏற்படும், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. இப்படியான அச்சமூட்டும் தகவல்கள் போலியானவை. அதனை எவரும் […]

error: Content is protected !!