இலங்கை – வீட்டை விட்டு வெளியேறிய இரு சிறுவர்கள் மாயம்!
கண்டி, தென்னகும்புர பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றை தினம் (08.10) அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குறித்த சிறுவர்களின் தாயார் இந்திரமணி காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். தென்னகும்புரவில் மகாவலி ஆற்றின் பக்கம் இரண்டு சிறுவர்களும் செல்வதைக் கண்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



