கலிஃபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு!
கலிஃபோர்னியாவின் Big Bear Cityஇற்கு அருகாமையில் இன்று 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 2:51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கடந்த வாரத்தில் இப்பகுதியில் 2.5 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும்போது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளையும் அந்நாட்டு […]




