உலகம்

மத்திய கிழக்கை சூழ்கிறது போர் மேகம்: வான்வெளியை மூடியது ஈரான்!

  • January 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்குக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆஸ்திரேலியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டார் மற்றும் ஓமான் நாட்டுக்குரிய பயண எச்சரிக்கையின் ‘அபாய’ நிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரானின் போராட்டங்கள் தொடரும் நிலையில் அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. ஈரானில் மோதல்நிலை உக்கிரமடையும் என்பதாலேயே வான்வெளி மூடப்பட்டுள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய கிழக்கிலுள்ள தமது படைகளை அமெரிக்கா வெளியேற்றி வருகின்றது. இராணுவ நடவடிக்கைக்குரிய தந்திரோபாய நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஈரானுக்கு ஆஸ்திரேலியா பயணத் தடை […]

இந்தியா

தொடர்கிறது “ஆபரேஷன் சிந்தூர்”: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!

  • January 14, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது.எனவே, பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.” இவ்வாறு இந்திய இ ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 15 ஆம் திகதி இராணுவ தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் டெல்லியில் நேற்று செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதன்போதே இந்திய இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, […]

ஆஸ்திரேலியா

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவு!

  • January 14, 2026
  • 0 Comments

ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான ஈரான் மக்களின் துணிச்சலான போராட்டத்திற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கின்றது என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Benny Wong அறிவித்துள்ளார். ஈரான் அரசாங்கம் அதன் சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். போராட்டக்காரர்;கள் கொலை செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதும் உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் […]

உலகம்

ஈரானில் உக்கிரமடையும் போராட்டம்: கூட்டு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல், அமெரிக்கா?

  • January 14, 2026
  • 0 Comments

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் திகதி தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. “ஜென் இசட்” இளைஞர்கள் தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, ஜனாதிபதி மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வலியுறுத்தினர். இதனையடுத்து கடந்த இரு வாரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் ஈரான் முழுவதும் வியாபித்து பரவி […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமர்மீது விமல் விமர்சனக் கணை தொடுப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச சூளுரைத்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்ச இன்று சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், பிரதமர் ஹரிணி அமரசூரிய அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர் போல செயல்படுவதாகவும், கல்வி […]

அரசியல் இலங்கை செய்தி

போராட்டம் வெடிக்கும்: என்பிபி அரசுக்கு எதிரணி எச்சரிக்கை!

  • January 1, 2026
  • 0 Comments

ஊடகங்கள்மீது கைவைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து வீதயில் இறங்கிப் போராடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJPபொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தோல்வி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதனிடம் தெளிவான வேலைத்திட்டம் இல்லை. இதனை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது […]

அரசியல் இலங்கை செய்தி

தீய சக்திகளுக்கு அமைச்சர் லால்காந்த எச்சரிக்கை!

  • December 31, 2025
  • 0 Comments

“மக்கள் சக்திக்கு முன்னால் வேறு எந்த சக்தியும் தாக்கு பிடித்து நிற்க முடியாது. எனவே, மக்கள் ஆணைக்கு புறம்பாக செயல்பட்டால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” இவ்வாறு அமைச்சர் லால்காந்த K. D. Lalkantha எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கும் தரப்பானது தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக வழியிலான பயணம் தொடர்பில் கவலையடைந்துள்ளது. எனவே, எமது பயணத்தை குழப்புவதற்கு அத்தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த சதி […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. அரசாங்கம் குறித்து அபாய சங்கு ஊதுகிறார் சரத் வீரசேகர!

  • December 30, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு (NPP) மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு குறைவடைந்து வருகின்றது. கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை இதனை பிரதிலளிக்கின்றது. எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரியவில்லை. தேசிய […]

error: Content is protected !!