சீனாவில் நாயைப்போல் தோற்றமளிக்கும் வினோத மலை – பார்வையிட குவியும் மக்கள்

சீனாவின் ஷங்ஹாயைச் சேர்ந்த வடிவமைப்பாளர் குவோ சிங்ஷான் எடுத்த புகைப்படம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாயைப்போல் தோற்றமளிக்கும் மலையை அவர் படத்தின்கீழ் “Puppy Mountain” என பதிவிட்டிருந்தார்.
அந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்துகொண்டதால் அந்த இடம் இப்போது சுற்றுப்பயணிகள் செல்லும் இடமாக மாறியுள்ளது.
கடந்த மாத இறுதியில் ஹுபெய் மாநிலத்தில் அமைந்துள்ள யிச்சாங்கிற்கு குவோ சென்றிருந்தார். அங்கு அவர் எடுத்த படங்களை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தபோது குவோ ஒன்றைக் கவனித்தார்.
யாங்சி (Yangtze) ஆற்றோரம் இருக்கும் ஒரு மலையாகும். நாய் தன்னுடைய தலையைத் தரையில் கிடத்தியிருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது அந்த மலையாகும்.
அதைப் பார்த்த குவோவுக்கு எல்லையில்லா ஆனந்தம் என குறிப்பிட்டுள்ளனர். அந்த நாய் அமைதியாக ஆற்றைப் பாதுகாப்பதுபோல் இருந்ததாக குவோ குறிப்பிட்டுள்ளார்.
சீன சமூக ஊடகமான RedNote-இல் அந்தப் படத்திற்கு பத்தே நாள்களில் 120,000 விருப்பக்குறிகள் குவிந்தன. Weibo எனும் சமூகத் தளத்தில் அந்தப் பதிவை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டனர்.