இலங்கை

உலகின் தலைச்சிறந்த தீவுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!

பயண இணையத்தளமான Big 7 Travel வெளியிட்ட “2023 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 சிறந்த தீவுகள்” பட்டியலில் உலகின் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

50 தீவுகள் கொண்ட குறித்த பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தை பெற்றுள்ளது. இலங்கையின் தலைச்சிறந்த உணவு, விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சிறந்த தீவாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக Big 7 Travel வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலப்பகுதியில் நலிவடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் இருந்தும் இலங்கை மீண்டு வர சுற்றுலா பயணிகள் பெரும் பங்கு வகித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய கௌரவமானது அதிகளவிலான சுற்றுலாத்துறையினரை ஈர்க்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்