இலங்கை செய்தி

இலங்கையில் பன்றிக்காய்ச்சல் பரவல் வேகம் – கடுமையாகும் சட்டம்

இலங்கையில் பன்றிக்காய்ச்சல் பரவல் வேகமடைந்துள்ளதாக இலங்கை கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட நோய்த்தடுப்புச் சட்டத்திற்கு அமைவாக அதிகாரிகள் செயற்பட்டிருந்தால் இந்த பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தி இருக்கலாம் என சங்கத்தின் உறுப்பினர் ஜெயலத் பாலசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, தங்களது பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஏதேனும் நோய் காணப்பட்டால் உடனடியாக கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, பன்றிகள் மத்தியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பன்றிகளை அறுப்பது, பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் “தொற்று” அல்லது “சந்தேகத்திற்குரிய” பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பன்றிகள் அல்லது பன்றி இறைச்சி பொருட்களை கொண்டு செல்வது, பன்றிகளை அறுப்பது, பன்றிகளை செயற்கையாக இனப்பெருக்கம் செய்தல், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விநியோகித்தல் மற்றும் தொற்றுள்ள பாதிக்கப்பட்ட விலங்குகளின் சடலங்களை நீர்நிலைகளில் அல்லது வழிகளில் அப்புறப்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்படும்.

விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் திருமதி கே.ஏ.சி.எச் அபேரத்ன கொத்தலாவலவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!