ஐரோப்பா செய்தி

780 வெளிநாட்டவர்களுக்கு கோல்டன் விசாக்கள் வழங்கிய ஸ்பெயின் – பயனடைந்த 15,300 பேர்

780 வெளிநாட்டவர்களுக்கு கோல்டன் விசாக்கள் வழங்கிய ஸ்பெயின் – பயனடைந்த 15,300 பேர்

ஸ்பெயினில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒக்டோபர் இறுதி வரை சுமார் 780 கோல்டன் விசாக்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டன.

ஸ்பெயின் அரசாங்கத்தால் வெளியிட்ட தகவலுக்கமைய ஜனவரி மற்றும் மார்ச் 2024 க்கு இடையில், ஸ்பெயின் மாதத்திற்கு சராசரியாக 69 கோல்டன் விசாக்களை வழங்கியது.

அதே நேரத்தில் ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரை, வழங்கப்பட்ட கோல்டன் விசாக்களின் மாத சராசரி 95 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை 2023 புள்ளிவிவரங்களை விட கணிசமாகக் குறைவாக உள்ளது, கடந்த வருடம் ஸ்பெயின் வெளிநாட்டினருக்கு சுமார் 3,200 கோல்டன் விசாக்களை வழங்கியது.

பல ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையிலான கோல்டன் விசாக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஸ்பெயின் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டு முதல், ஸ்பெயினில் அதிகாரிகளால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து, 15,300 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான கோல்டன் விசா பெறுபவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்களாகும். அதைத் தொடர்ந்து ரஷ்யர்கள் மற்றும் இங்கிலாந்து குடிமக்கள் உள்ளனர்.

ஸ்பெயினின் கோல்டன் விசா திட்டத்தின் சிறந்த பயனாளிகள் அமெரிக்கா, ஈரான், உக்ரைன், வெனிசுலா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாகும்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!