காங்கோவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!
காங்கோவின் தலைநகரில் இன்று (19.05) அதிகாலை துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இராணுவ சீருடையில் இருந்த ஆயுததாரிகள் ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு உயர் அரசியல்வாதியின் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 03 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஃபெடரல் சட்டமன்ற உறுப்பினரும் பொருளாதாரத்தின் முன்னாள் துணைப் பிரதமருமான விட்டல் கமெர்ஹேவின் கின்ஷாசாவின் இல்லதை்தை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியுள்ளனர்.
தாக்குதல்தாரிகள் காங்கோவைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் காங்கோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது, “துப்பாக்கிச் சூடு பற்றிய அறிக்கைகளுக்கு” பிறகு எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியது.





