ஸ்வீடனில் துப்பாக்கிச்சூடு – 06 பேர் படுகாயம் !

ஸ்வீடனின் Gävle என்ற நகரில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 06 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவகங்கள், மதுபான கூடங்கள் நிறைந்த பரபரப்பான சாலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 18 வயதிற்கு உட்பட்ட 06 இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதல்தாரியான 14 வயது சிறுவன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் எந்த குற்றவியல் குழுவுடனும் தொடர்பில் இருக்கவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 80,000 மக்கள் வசிக்கும் கேவ்லே (Gävle) , ஸ்டாக்ஹோமிலிருந்து வடக்கே 86 மைல் தொலைவில் உள்ளது. அத்துடன் ஸ்வீடனின் 13வது பெரிய நகரமாகவும் காணப்படுகிறது.