ஆஸ்திரேலியாவில் கடற்பகுதியில் நின்ற படகை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவி ராட்னெஸ்ட் தீவுக்கு அருகே ப்ரீமண்ட் கடற்பகுதியில் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. கடலோர பொலிஸார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது என்ஜின் பழுதாகி இருப்பதால் படகு இங்கு நின்று கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த பொலிஸார் அந்த படகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சுமார் 30 பைகள் காணப்பட்டன. அதனை பிரித்து பார்த்தபோது 800 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து படகில் இருந்த 2 வாலிபர்களையும் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சிட்னி விமான நிலையத்தில் வெளிநாட்டுக்கு புறப்பட தயாராக இருந்த மற்றொரு வாலிபரையும் பொலிஸார் கைது செய்தனர்.
(Visited 10 times, 1 visits today)