ஜெர்மனியில் புகலிடம் கோருவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

ஜெர்மனியில் புகலிடம் கோரும் உளவியல் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்களில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களின் பிரச்சினைகளுக்கான சாத்தியமான தீர்வுகள் மற்றும் வன்முறை தொடர்பான கவலைகள் அவர்களிடம் இருப்பதாக ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் உளவியல் நிபுணர்களுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களை உளவியல் சிகிச்சை வழங்குவதில் அரசாங்கம் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது.
இவ்வாறிருக்க, ஜெர்மனியின் இடதுசாரி அரசியல்வாதிகள் மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகளை ஆராய மறுப்பதாக ஜெர்மனியின் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஜெர்மனியில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் நெரிசலான இடங்களுக்கு செல்வதற்கு அச்சப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதே சமயம் இடம்பெயர்வு தொடர்பான செலவுகள் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில், ஜெர்மனியின் வன்முறைச் செயற்பாடுகளுக்கு அங்கு வசிப்பவர்களின் பூர்வீகத்தை விட ஆணாதிக்கம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதாக அந்நாட்டு சமூகவியலாளர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.