ரஷ்ய அணுமின் நிலையம் இலங்கையில்!
இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரொசாட்டமுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இரண்டு அணு உலைகளை இயக்கி 300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் தீவு நாடு எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தனக்கென சொந்த மின் உற்பத்தி நிலையத்தை வைத்திருப்பதாக கூறிய ரஷ்ய தூதுவர் விரைவில் கட்டுமானத்தை தொடங்குவதற்கான அனுமதியை அரசு துரிதப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
‘இலங்கை அமைச்சரவையின் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு ஒரு முன்மொழிவு உள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையும் இப்போது அதைப் பார்க்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரோசாட்டம் நான்கு வெவ்வேறு பகுதிகளில் நான்கு பணிக்குழுக்களை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.