ஏழாவது முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ரிஷி சுனக் அரசாங்கம்!
பிரித்தானிய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான பீட்டர் போன், நேற்று பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு வெற்றிடத்தை நிரப்ப மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்டர் போனின் தவறான நடத்தை காரணமாக அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவருடைய வெற்றிடத்தை நிரப்ப ரிஷி சுனக் தலைமையிலான அரசாங்கம் சவாலான வாக்கெடுப்பு ஒன்றுக்கு முகங்கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனக்கின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஜூலை தொடக்கத்தில் இருந்து அதன் ஏழாவது இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது.
ஆறு வாரங்களுக்கு பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது சுயேச்சையாக அமர்ந்திருக்கும் போன், அந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடலாம், ஆனால் கன்சர்வேடிவ் கட்சிக்கு போட்டியிட முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய வாக்கெடுப்பில் அவர் 18,500 க்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றிருந்தார்.