இலங்கை மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு

மேல் மாகாணத்தில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்தச் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டார்.
அதற்கமைய இரண்டாவது கிலோமீற்றருக்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபாய் என்ற பயணக் கட்டணம் நாளை முதல் 90 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது.
(Visited 10 times, 1 visits today)