ஜப்பானில் வேகமாக பரவும் அரிய வகை தொற்று நோய் – 1000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
தசைகளைக் கரைக்கும், ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறியை (STSS) ஏற்படுத்தும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளதாக ஜப்பானிய சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் எனும் தசையை கரைக்கும் பாக்டீரியா மிகவும் அரிதானது, ஆனால் கடந்த ஆண்டு முதல் ஜப்பானியர்கள் மத்தியில் இது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நோயின் அறிகுறிகள் தொண்டை புண், உறுப்புகளின் செயல்பாடு குறைபாடு, உடல் வீக்கம், மூட்டு வலி மற்றும் குறைந்த இரத்த அழுத்தம்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாக்டீரியா பரவுவது வைரஸைப் போல வேகமாக இல்லை என்றும், இந்த பாக்டீரியா வேகமாக பரவுவது குறித்தும் அவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
சுத்தத்தை பேணுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், இருமல் அல்லது தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் போன்ற நல்ல பழக்கவழக்கங்களால் இந்த பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பாக்டீரியாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அது 48 மணி நேரத்திற்குள் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் இறப்பு நிகழ்தகவு 30% என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.