காலம் கடந்து வாய் திறந்த ரணில் – வியப்பில் அநுர அரசாங்கம்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலங் கடந்து பேசியிருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 திகதி மற்றும் மே மாதங்களில் ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும்.
விவாதத்தை நடத்துவதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி குழுவும் வாதிட்டன.
நாட்டில் ஜனநாயகம் மற்றும் நீதி நிலைத்திருக்க வேண்டும். இதற்காக நாம் இந்த விவாதத்தை நடத்துவோம். மக்கள் இதன் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க பட்டலந்த சம்பவத்தின் A முதல் Z வரை அறிந்தவர்.
‘பட்டலந்த குறித்து இன்று இல்லை. கடந்த 35 ஆண்டுக்கு முன்னர் இதைப் பற்றி ரணில்பேசியிருக்கலாம். அல் ஜசீரா அதைப் பற்றி எழுப்பும் வரை அவர் எதுவும் சொல்லவில்லை. ரணில் இவ்விடயத்தில் தற்போது மிகவும் தாமதமாகிவிட்டதாவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.