ஐரோப்பா

பிரித்தானியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே ஊழியர்கள்..

பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன.மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதால் பிரித்தானியாவில் அதன் பாதிப்பு அதிகமானது.அதன் ஒருபகுதியாக வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு பணவீக்கம் தாறுமாறாக எகிறியது.

இதனால் பிரித்தானியாவி; ரயில்வே, விமான நிலையம், தபால் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி அவ்வப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது அரசாங்கத்துக்கு பெரும் அழுத்தமாக உள்ளது.

இந்த நிலையில் வருகிற 26ஆம் திகதி (சனிக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி (சனிக்கிழமை) பிரித்தானியாவில் உள்ள சுமார் 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!