ஐரோப்பா

ரஷ்யா-ஆப்பிரிக்கா இடையிலான உச்சி மாநாட்டில் புடின் செய்த செயல் – வைரலான வீடியோ

பிற நாட்டு தலைவர்கள் நின்று கொண்டு இருப்பதை பார்த்து தனது இருக்கையில் இருந்து எழும்ப முயன்ற ஆப்பிரிக்க நாட்டு ஜனாதிபதியை ரஷ்ய ஜனாதிபதி புடின் இருக்கையில் அமரும் படி கேட்டுக் கொண்டார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஐ.நாவின் உணவு தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியது.இதனால் ஆப்பிரிக்க நாடுகள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்படும் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு தேவையான தானியங்களை வழங்க ரஷ்யா உதவும் என தெரிவித்து இருந்தது.இந்நிலையில், ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் நகரில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் பங்கேற்ற ரஷ்யா-ஆப்பிரிக்கா இடையிலான இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெற்றது.

russia-s-putin-tells-african-comoros-leader-to-sit:“உட்காருங்கள்,உட்காருங்கள்” ஆப்பிரிக்க நாட்டு தலைவரை இருக்கையில் அமர வைத்த புடின்: வைரல் வீடியோ

இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆப்பிரிக்க நாட்டு தலைவரை இருக்கையில் அமர சொல்லி வேண்டிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான பொது சந்திப்பிற்காக ஆப்பிரிக்க தலைவர்கள் குழுமி இருந்த நிலையில் கொமொரோஸின் நாட்டு ஜனாதிபதி அசாலி அஸெளமானி யாரும் அமர்வதற்கு முன்பு தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டார்.பின்பு யாரும் அமரவில்லை என்பதை உணர்ந்து இருக்கையில் இருந்து எழுந்திரிக்க முயற்சித்த போது ரஷ்ய ஜனாதிபதி “அமருங்கள், அமருங்கள்” என வேண்டிக் கொண்டு இருக்கையில் அவரை அமர வைத்தார்.

https://twitter.com/SpriterTeam/status/1684687951408558082?s=20

அவர் மீண்டும் மீண்டும் இருக்கையில் இருந்து எழுந்திரிக்க முயன்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அவரை இருக்கையில் அமர்ந்து இருக்குமாறு வேண்டி கேட்டுக் கொண்டார்.இந்த காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது, ட்விட்டரில் மட்டும் இந்த வீடியோ 387k பார்வைகளை பெற்றுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்