இலங்கை: லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினி அமரசூரிய

பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று பொரளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலைக்கு (LRH) ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார்.
சிறுவர் தினமான இன்று பிரதமரின் வருகை அமைந்துள்ளது.
தனது விஜயத்தின் போது, பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்கள் பரிசில்களை விநியோகித்ததையும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதையும் காணமுடிந்தது.
(Visited 12 times, 1 visits today)