ஐரோப்பா

லண்டனில் தமிழ் இளைஞன் மரணம் – உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் பிரபல அரசியல்வாதியின் நெருங்கிய உறவினர்

தென்மேற்கு லண்டன் Twickenham பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்  21 வயதுடைய  அனோஜன் ஞானேஸ்வரன் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Police give update on Strawberry Hill murder investigation after man, 21 , stabbed to death - MyLondon

காரைநகர்  சின்னாலடியை  சேர்ந்த ஞானேஸ்வரனின் மகனே இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அனோஜன் ஞானேஸ்வரன் மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் மூத்த மகன் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை இரவு 11.55 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற நிலையில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Murder investigation launched after man dies at Strawberry Hill Station | Local News | News | Twickenham Nub News | by Heather Nicholls

19 வயதுடைய இருவர் மற்றும் 18 வயதுயடைவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த 19 வயது இளைஞன், 20 வயது இளைஞன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 16 வயது சிறுவன் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

A shot of police carrying out investigations at Strawberry Hill Railway station

இந்த சம்பவம் தொடர்பில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மக்களின் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV காணொளிகளை பொலிஸார் கோரியுள்ளனர்.

அதற்கமைய, விசாரணைக்கு உதவிய மக்களுக்கு தான் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த அனோஜன் ஞானேஸ்வரன், காலம் சென்ற மகேஸ்வரன் (முன்னாள் யாழ் , கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் ) மற்றும் விஜயகலா மகேஸ்வரனின் பெறா மகன் என தெரியவந்துள்ளது.

Man, 21, stabbed to death at Strawberry Hill station named for first time as three more arrested - MyLondon

இதேவேளை, அனோஜன் ஞானேஸ்வரனின் நண்பர்கள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில்  தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தையடுத்து Twickenham பகுதியில் வாழும் தமிழ் குடும்பங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அச்சத்தில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

https://twitter.com/metpoliceuk/status/1744683792034377823

https://twitter.com/MPSRichmond/status/1744706807686213756

https://x.com/MPSRichmond/status/1744706807686213756?s=20

https://twitter.com/BTP/status/1744724856347001037?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1744724856347001037%7Ctwgr%5E4793c1a497edad3044bda6a980cf54593e1b63e8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.mylondon.news%2Fnews%2Ftransport%2Flive-south-western-railway-updates-28412966

தொடர்புடைய செய்தி

https://iftamil.com/the-fate-of-a-young-man-from-karainagar-jaffna-in-london/

(Visited 48 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்