இலங்கையில் அதிக வெப்பநிலையால் குடிநீர் இன்றி மக்கள் சிரமம்

இலங்கை முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலையால், பல பகுதிகளில் மக்கள் தற்போது குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
அதற்கமைய, இரண்டாயிரத்து 278 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் தாங்கி ஊர்திகளைப் பயன்படுத்தி மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 3 times, 1 visits today)