பாகிஸ்தானில் எண்ணெய் கசிவால் நிகழ்ந்த விபரீதம் – ஆபத்தில் உள்ள பலர்!
தென்மேற்கு பாகிஸ்தானில் எண்ணெய் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 56 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலூசிஸ்தான் மாகாணத்தின் நௌஷ்கி மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பலூசிஸ்தான் முதலமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் உள்ள சிவில் மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.





