ஜப்பான் கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவிய வடகொரியா
ஜப்பான் கடலை நோக்கி வடகொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
வட கொரியாவின் தென்கிழக்கில் உள்ள கடலோர நகரமான வொன்சானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவுகணைகள் ஏவப்பட்டதைக் கண்டித்துள்ள தென் கொரிய பாதுகாப்புப் படையினர், இது பிராந்தியத்தின் அமைதிக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
(Visited 25 times, 1 visits today)





