நெதர்லந்தில் புதிய நடைமுறை – பிள்ளைகளின் மதிப்பெண்களைப் பெற்றோர் தெரிந்துகொள்ள தடை
நெதர்லந்தில் பாடசாலை ஒன்றில் பிள்ளைகளின் மதிப்பெண்களைப் பெற்றோர் தெரிந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் அனைத்து மதிப்பெண்களையும் பெற்றோருடன் பகிரும் ஒரு செயலியை Jordan – Montessori Lyceum Utrecht பாடசாலை பயன்படுத்துகிறது.
அதனால் பிள்ளைகளிடையே மன உளைச்சல் அதிகரிப்பதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடிக்கடி செயலியைப் பயன்படுத்தாத பெற்றோருடைய பிள்ளைகளின் மன உளைச்சல் குறைவாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு மாறாகப் பெற்றோர் அடிக்கடி செயலியைப் பயன்படுத்தினால் பிள்ளைகளின் மன உளைச்சல் அதிகமாவதாக பாடசாலை ஆசிரியர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதைக் கட்டுப்படுத்த ஒரு மாதத்திற்குப் பெற்றோருடன் பிள்ளைகளின் மதிப்பெண்கள் பகிரப்படமாட்டாதென குறிப்பிடப்படுகின்றது.
அந்த முடிவுக்குப் பெரும்பாலான பெற்றோரும் பிள்ளைகளும் ஆதரவு அளித்தனர்.