மியன்மார் நிலநடுக்கம் : இன்னும் டஜன் கணக்கானவர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்!

மியான்மர் மற்றும் தாய்லாந்தை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இறப்பு எண்ணிக்கையை 3,354 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 4,850 பேர் காயமடைந்துள்ளனர், 220 பேர் காணாமல் போயுள்ளனர் என்று எம்ஆர்டிவி அரசு ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த நிலநடுக்கத்தால் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் குறைந்தது 23 பேர் இறந்துள்ளனர் என்று பாங்காக் பெருநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் டஜன் கணக்கானவர்கள் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)