வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்ற முஹம்மது யூனுஸ்

ஷேக் ஹசீனா பிரதமராக 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வகையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இன்று பதவியேற்றார்.
“நான் அரசியலமைப்பை நிலைநிறுத்துவேன், ஆதரிப்பேன் மற்றும் பாதுகாப்பேன், மேலும் எனது கடமைகளை நேர்மையாக செய்வேன்” என்று யூனுஸ் பதவியேற்பு நிகழ்வில் தெரிவித்தார்.
84 வயதான யூனுஸ், 2006 ஆம் ஆண்டு, கிராமீன் வங்கியின் மூலம் செயல்படுத்திய மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸுக்கு முன்னோடியாக இருந்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தனது உத்தியோகபூர்வ இல்லமான பங்கபாபனில் பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.
(Visited 18 times, 1 visits today)