இலங்கை செய்தி

வீட்டு உண்வை கேட்டு சிறைச்சாலையில் கோரிக்கை விடுத்த அமைச்சர் கெஹலிய

சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது சிறைச்சாலை வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுக்கு பதிலாக வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகளை பெற்றுக்கொள்ள அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

எனினும் அமைச்சரின் கோரிக்கை தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களிடம் சிபாரிசு பெற்று அது தொடர்பில் தீர்மானம் எடுக்க வெலிக்கடை சிறைச்சாலை தீர்மானித்துள்ளது.

அப்போது சுகாதார அமைச்சராக கடமையாற்றிய தற்போதைய சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற  இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய அமைச்சரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கடந்த 3ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், அவர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, வைத்தியர்கள் வழங்கிய சிபாரிசுக்கு அமைய வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் மகஜரை கொண்டு வந்த அமைச்சரை சிறைச்சாலைக்கு அனுமதிப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்றதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!