ஜேர்மனியில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்யும் மைக்ரோசொப்ட் நிறுவனம்!
செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் அதன் டேட்டா சென்டர் திறன்களை பெருமளவில் விரிவுபடுத்த ஜேர்மனில் முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித், Scholz உடனான விளக்கக்காட்சி பேர்லினில் இடம்பெற்றபோது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனியில் கிட்டத்தட்ட 3.3 பில்லியன் யூரோக்கள் ($3.5 பில்லியன்) முதலீடு செய்யப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வரவேற்றார்.
“இந்த வாய்ப்புகளுக்கான அடிப்படையாக முன்னேற்றம், வளர்ச்சி, நவீனத்துவம் மற்றும் உலகளாவிய வெளிப்படைத்தன்மைக்கு இது ஒரு நல்ல அர்ப்பணிப்பாகும்,” என்று ஜேர்மன் அதிபர் கூறியுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)