ஆசியா செய்தி

ஜப்பானில் 9ஆவது ஆண்டாக ஏற்பட்ட மாற்றம் – கடுமையாக சரிந்த பிறப்பு விகிதம்

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக கடுமையான சரிவைக் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந்தைகள் பிறந்தன. முந்தைய 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீதம் குறைவாகும்.

இதன் மூலம், தொடா்ந்து 9வது ஆண்டாக நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவைப் பதிவு செய்துள்ளது.

2024-ஆம் ஆண்டின் குழந்தைகள் பிறப்பு, 1899-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகியுள்ள குறைந்தபட்ச வருடாந்திர எண்ணிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டிலும் இதே போக்கு நீடிக்கும் எனவும், 2025-ஆம் ஆண்டு முழுவதும் ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை முதல்முறையாக 7 லட்சத்துக்கும் குறைவாகப் பதிவாகும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!