உலகில் பார்வையிட சிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த யாழ்ப்பாணம்!
உலகில் 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த இடங்களுக்கான பட்டியலில் யாழ்ப்பாணம் இடம்பிடித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற பயண வழிகாட்டி இதழான ‘லோன்லி பிளானட்’ ஆஃப் அமெரிக்கா (Lonely Planet of America) 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்களை பட்டியலிட்டுள்ளது.
இதில் யாழ்ப்பாணம், சமீப காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இடமாக மாறியுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் இந்தத் தேர்வில் முக்கியமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக பிராண்டுகளில் ஒன்றான ‘லோன்லி பிளானட்’ 1970 முதல் இயங்கும் ஒரு சஞ்சிகையாகும்.
இந்த சஞ்சிகையின் 150 மில்லியனுக்கும் அதிகமான பயண வழிகாட்டி புத்தகங்கள் இதுவரை விற்பனையாகியுள்ளன.
(Visited 7 times, 8 visits today)





