அமெரிக்க துருப்புகளை தன்னிச்சையாக பயன்படுத்தும் ட்ரம்ப் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சிகாகோ (Chicago) மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்த தேசிய காவல்படை துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
காவல் பணிக்கு துருப்புக்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குற்றங்கள் மீண்டும் உயரத் தொடங்கும் போது, நாங்கள் மிகவும் மாறுபட்ட மற்றும் வலுவான வடிவத்தில் திரும்பி வருவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ஓரிகானின் (Oregon) போர்ட்லேண்ட் (Portland), வொஷிங்டன் டிசி (Washington DC) ஆகிய பகுதிகளில் துருப்புக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சி நடத்தும் நகரங்களுக்கு தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்ப ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார். துருப்புக்கள் பொதுவாக மாநில ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் உள்ள நிலையில், இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ட்ரம்பின் முடிவிற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே சட்டத்தை அமல்படுத்தவும் குற்றம் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை ஒடுக்கவும் துருப்புக்கள் தேவை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த கூற்றை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.





