UKவில் 04 நாள் வேலை வாரம் சாத்தியமா? : முழுநேர ஊதியத்தை பெறுவதற்கு எதிர்ப்பு!
இங்கிலாந்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரங்களை அமுல்படுத்துவதற்கு எதிராக கவுன்சில் தலைவர்களை அரசாங்கம் எச்சரித்துள்ளது.
வீட்டுவசதி, சமூகங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கத்திற்கான வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்டீவ் ரீட் (Steve Reed) இந்த விடயம் தொடர்பில் உள்ளுர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலைக்கு முழு வார ஊதியத்தைப் பெற்றால் அவர்கள் தோல்வியடைந்தவர்களாகக் கருதப்படலாம் என்று கூறியுள்ளார்.
அத்துடன் உள்ளூர் அதிகாரிகள் “பகுதிநேர வேலைக்கு முழுநேர ஊதியம்” வழங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.
“நான்கு நாள் வாரத்துடன் தொடர்புடைய தற்போதைய வழிகாட்டுதல் விதி நடைமுறையில் உள்ளது, மேலும் இந்த சிக்கலை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன், குறிப்பாக ‘கட்டாய நியாயப்படுத்தல் இல்லாமல் முழுநேர ஊதியத்திற்கு பகுதிநேர வேலையைச் செய்யும் ஊழியர்கள் தோல்வியின் குறிகாட்டியாகக் கருதப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கேம்பிரிட்ஜ்ஷயர் (Cambridgeshire) நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய முதலாவது கவுன்சிலாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




