இலங்கை

சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று : தரவரிசையில் பின்தள்ளப்பட்ட இலங்கை!

மார்ச் 20 ஆம் திகதி உலக மகிழ்ச்சி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டு மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 128 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

மற்றவர்கள் மீதான நம்பிக்கை, எதிர்காலம் மீதான நம்பிக்கை, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக பின்லாந்து மக்கள் ஏனையவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக வருடாந்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதேவேளை இஸ்ரேல் 8 ஆவது இடத்தில் உள்ளது.

ஹமாஸுடனான மோதலால் இஸ்ரேல் பாதிக்கப்பட்ட போதிலும் 8ஆவது இடத்தில் உள்ளது. மேலும் 147 ஆவது இடத்தில் தற்போது தாலிபான்களின் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் இடம்பிடித்துள்ளது. இதேவேளை இலங்கை 128ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 38 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!