அமெரிக்க அரசாங்கத்திடம் 4 நாட்கள் நிதி மாத்திரமே எஞ்சியுள்ளதாக தகவல்!

அமெரிக்க அரசாங்கம் பொதுச் சேவைகளுக்குச் செலவிட இன்னும் 4 நாட்களுக்கான நிதி மட்டுமே இருப்பில் உள்ளது.
பல்லாயிரம் வேலைகள் தற்காலிகமாக முடங்கிப் போகும் அபாயம் நீடிக்கிறது. நவம்பர் 17ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு நிதி வழங்க வகை செய்யும் இடைக்கால மசோதாவை செனட் சபை அங்கீகரித்துள்ளது.
ஆனால் குடியரசுக் கட்சி மக்களவை உறுப்பினர்கள் முன்பே அதை நிராகரித்து விட்டனர்.
நாளை மறுநாளுக்குள் இடைக்கால மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். நாளை அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக மக்களவை நாயகர் கெவின் மெக்கார்தி கூறியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் முடங்கினால் அது உலக அளவில் நிதிச் சந்தைகளையும் நாட்டின் நிதித் தரநிலையையும் பாதிக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
(Visited 7 times, 1 visits today)