இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுலாகுமா இல்லையா என்பதை உறுதியாகக் கூறமுடியாதென்றும் அவர் மேலும் சுட்டிகாட்டினார்.





