செய்தி விளையாட்டு

INDvsAUS – முதல் நாள் முடிவில் 311 ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இப்போட்டியின் மூலம் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவிற்கு எதிராக குறிப்பாக 4,483 பந்துகளுக்கு பிறகு சிக்சர் அடித்த வீரராக மாறி சாதனை படைத்தார்.

நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 57 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 72 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், பும்ரா பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். மிட்சல் மார்ஸ் 4 ரன்களிலும் அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்துள்ளது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

(Visited 32 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி