வங்கதேசத்தில் அடித்து கொல்லப்பட்ட இந்தியர் – டெல்லியில் வெடித்த போராட்டம்!
வங்கதேசத்தில் இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே இன்று நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் 25 வயதான திபு சந்திர தாஸ் அடித்து கொலை செய்யப்பட்டார்.
அவரது மரணம் தொடர்பாக குறைந்தது 10 பேர் கைது செய்யப்பட்டதாக வங்கதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையை கண்டித்தே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த போராட்டத்திற்கு பெரும்பாலும் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பிற வலதுசாரி இந்து குழுக்கள் தலைமை தாங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “வங்கதேசத்தில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுவதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது” மற்றும் “எங்கள் மௌனத்தை பலவீனமாக தவறாகக் கருதக்கூடாது” என்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.





