ஜெர்மனி மக்களுக்கு வீட்டு உதவி தொகை அதிகரிப்பு
ஜெர்மனி மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற வீட்டு உதவி தொகை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு தொடக்கம் ஜெர்மனியில் வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் நிதி உதவியானது அதிகரிக்கப்பட்டு இருந்தது.
அதாவது இதுவரை காலங்களும் ஜெர்மனியில் வீட்டு உதவி தொகையை பெறுகின்றவர்களுடைய எண்ணிக்கையானது 72 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
தற்பொழுது ஜெர்மன்யில் மொத்தமாக 2 மில்லியன் பேர் இவ்வாறு மேலதிக பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதாக தெரியவந்திருக்கின்றது.
இந்நிலையில் வீட்டு உதவி தொகையை பெறுகின்றவர்களின் மொத்த எண்ணிக்கையானது 72 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளது. இதேவேளையில் 2022 ஆம் ஆண்டு இந்த வீட்டு உதவி தொகை 200 யுரோவாக இருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டு இந்த தொகையானது சராசரியாக 358 யுரோவாக உயர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த அதிகரிப்பானது 2024 ஆம் ஆணடில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.