சிங்கப்பூரில் புதிதாக பணியாற்ற தயாராகும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்டுமானம், கடல்துறை மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கே அறிவிப்பு லெளியாகியுள்ளது.
புதிய work permit அனுமதியின் கீழ் சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய தங்குமிடத்திற்கான ஆதார சான்றினை அவர்களின் முதலாளிகள் வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று தெரிவித்துள்ளது.
அதாவது புதிய work permit கீழ் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் அதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 19 முதல் சிங்கப்பூருக்கு வரும் அனைத்து work permitஊழியர்களுக்கும் பொருந்தும்.
இருப்பினும், மலேசியர்களுக்கு இது பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் work permit அனுமதி ஒப்புதலின் கூடுதல் தேவையாக இது சேர்க்கப்பட்டுள்ளது.