மத்திய சீனாவில் உள்ள விடுதியில் தீவிபத்து : 13 பேர் உயிரிழப்பு!
மத்திய சீனாவில் யாங்ஷாங்புவில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
தங்கும் விடுதி கட்டிடம் ஒன்றில் நேற்று (19.01) இரவு தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, தனியார் பள்ளியான குறித்த பள்ளியின் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பரில் சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.





