திருகோணமலையின் முக்கிய பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி!
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64 ஆம் கட்டை மலையின் இன்னுமொரு பகுதியில் இன்று பௌத்த துறவிகள் விசேட பூஜைகளை செய்துள்ளதாக மூதூர் இந்து மத குருமார் சங்கத் தலைவர் பாஸ்கர சர்மா தெரிவித்துள்ளார். 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மலையின் மீது பௌத்த விகாரை அமைக்கப்பட்ட நிலையில், அங்கு அம்பாள் வழிபாடுகள் நடைபெற்றதற்கான எச்சங்கள் இனங்காணப்பட்டது. இதனையடுத்து, குறித்த பகுதியை இந்துக்களுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை சுத்தம் […]













