ஐரோப்பா செய்தி

எகிப்து பிரமிட்டில் மறைவான பாதை கண்டுப்பிடிப்பு!

  • April 13, 2023
  • 0 Comments

எகிப்து – கிசாவின் கிரேட் பிரமிட்டுக்குள் ஒன்பது மீட்டர் நீளமுள்ள மறைவான பாதை கண்டுப்பிடிக்கப்ப்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுலா அமைச்சர் அகமது இசா தெரிவித்துள்ளார். வடக்குப் பகுதியில் செவ்ரான் மண்டலத்திற்குப் பின்னால் அமைந்துள்ள குஃபு பிரமிட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பகுதியில் இந்த பாதை கண்டுப்படிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த பகுதியில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.   ரகசிய சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கேபிள், கட்டமைப்பின் சுமையைக் குறைக்க கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது குறித்த […]

ஐரோப்பா செய்தி

ஸ்கொட்லாந்திற்கு பனிப்பொழிவு எச்சரிக்கை : விமானங்கள் இரத்தாகும் என தகவல்!

  • April 13, 2023
  • 0 Comments

ஸ்கொட்லாந்து மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த வாரம் முதல் பனிபெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பனிபொழிவு நிலவக்கூடும் என மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில் சேவைகள் தாமதமாகலாம் எனவும், விமான சேவைகள் தாமதமடைதல் மற்றும் சில நேரங்களில் இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அடுத்த வாரத்தில் குளிருடனான வானிலை நிலவக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://twitter.com/i/status/1631604769587437568

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் கடற்கரையில் கரையொதுங்கிய பைகள்: சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

  • April 13, 2023
  • 0 Comments

பிரான்ஸ் கடற்கரையொன்றில் வரிசையாக கரையொதுங்கிய பைகளை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் ஏராளம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஞாயிற்றுக்கிழமை, நார்மண்டியிலுள்ள Néville கடற்கரையில் பல பிளாஸ்டிக் பொட்டலங்கள் கரையொதுங்கின. அவற்றை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் 850 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். புதன்கிழமை, Vicq-sur-Mer கடற்கரையில் மேலும் ஆறு பைகள் கரையொதுங்கின.மொத்தத்தில் அந்த பைகளில் 2.3 டன் கொக்கைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.தண்ணீர் புகாத வகையில் பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்பட்டு அந்த போதைப்பொருள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. […]

ஐரோப்பா செய்தி

சுவிஸில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி புதைந்த நபர் செய்த செயல் – மீட்ட மீட்புகுழுவினர் (வீடியோ)

  • April 13, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் சிக்கிய ஒருவர் பனியில் புதைந்தார். அவரைத் தேடி மீட்புக் குழுவினர் விரைந்தனர். சுவிட்சர்லாந்திலுள்ள Lidairdes என்ற பகுதியில் பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளார் ஒருவர். அப்போது பனிப்பாறைச் சரிவில் அவர் சிக்கிக்கொண்டார்.அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மீட்புக்குழுவினரின் உதவியை நாட, மீட்புக் குழுவினர் அவரது குடும்பத்தினர் கூறிய இடத்துக்கு விரைந்துள்ளனர்.நல்லவேளையாக அவர் தான் செல்லும் பாதை குறித்து தன் குடும்பத்தினரிடம் முன்னரே தெரிவித்துள்ளார். அதன்படி மீட்புக்குழுவினர் அவரைத் தேடிச் சென்றபோது, ஹெலிகொப்டர் பாய்ச்சிய […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் புதிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கார்கள்!

  • April 13, 2023
  • 0 Comments

ஜெர்மனியை சேர்ந்த வாடகைக் கார் நிறுவனம், ஓட்டுநரில்லா மின்சார கார்களை, வாடிக்கையாளரின் வீடுகளுக்கு அனுப்பிவருவதாக தெரியவந்துள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம், கட்டுப்பாடு அறையிலிருந்து ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் அந்த காரை, வாடிக்கையாளர் தேவைப்படும் இடத்திற்கு ஓட்டிச்சென்று இறங்கிகொள்ளலாம். அதன்படி மீண்டும் அந்த கார் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தானாகத் திரும்பிவிடுகிறது. வே என்ற அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், ஐரோப்பிய சாலைகளில் முதல்முதலாக ஓட்டுநரில்லா கார்களை இயக்கியதாகவும், நகர சூழலில், சொந்தமாக கார் வைத்துக்கொள்ள விரும்பாதவர்களை மனதில் வைத்து […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அறிமுகமாகும் புதிய சட்டம் – வெளியான முக்கிய தகவல்

  • April 13, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடுவது தொடர்பாக புதிய சட்ட நகல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் விவசாய துறை அமைச்சர் இந்த புதிய சட்ட நகல் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஜெர்மனியின் விவசாய அமைச்சர் செம் ஒஸ்டமையர் அவர்கள் ஜெர்மன் பாராளுமன்றத்தில்  பெப்ரவரி 28 ஆம் திகதி புதிய ஒரு சட்ட நகலை சமர்ப்பித்திருக்கின்றார். தற்போது இளைஞர் யுவதிகள் மத்தியில் உணவு பழக்க வழக்கங்கள் சீர்கேடான முறையிலேயே பின்பற்றப்படுகின்றது, அதனை தவிர்க்கும் நோக்கில் சற்று  […]

ஐரோப்பா செய்தி

கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் ரஷ்யா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜப்போரிஜியா ஆகிய மாகாணங்களை திருப்பி அளிக்க முடியாது என்றார். இதில் ரஷ்யா ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் தெரிவித்துள்ளார். […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் பெண்ணின் அதிர்ச்சி செயல் – 12 வருடங்கள் சிறைத்தண்டனை

  • April 13, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஜிகாதிப் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து பெண் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Douha Mounib எனும் பிரான்ஸ் பெண் பயங்கரவாதிக்கே இச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பரிசைச் சேர்ந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முறையாக சிரியாவுக்கு பயணமாகியிருந்தார். தனது தாதி படிப்பினை மேற்கொள்ளச் சென்றதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் அவர் ‘ஜிகாதிக்காகவும் இஸ்லாம் மதத்துக்கு ஆதரவாகவும் போர் புரியப்போவதாக தெரிவித்திருந்தார். பின்னர் துருக்கிக்கும் அவர் பயணித்திருந்த நிலையில், துருக்கியில் வைத்து கடந்த […]

ஐரோப்பா செய்தி

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற உத்தரவு

  • April 13, 2023
  • 0 Comments

பிரித்தானிய அரச குடும்பம், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஆகியோரை தங்கள் இங்கிலாந்து இல்லமான ஃபிராக்மோர் வீட்டை காலி செய்யும்படி கேட்டுக்கொண்டதாக அறியப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தில் இருந்து விலகிய தம்பதியினரிடம், பெர்க்ஷயரில் உள்ள வின்ட்சர் கோட்டைக்கு அருகில் உள்ள வீட்டை விட்டுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக, ஹாரி மற்றும் மேகனின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தி கார்டியனில் ஒரு அறிக்கையின்படி, சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் ஃப்ரோக்மோர் காட்டேஜில் உள்ள […]

ஐரோப்பா செய்தி

கிரீஸில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வு

  • April 13, 2023
  • 0 Comments

கிரீஸில் செவ்வாய்க்கிழமை நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது என்று பிபிசியிடம் மரண விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணையில் பணிபுரியும் பத்து மரண விசாரணை அதிகாரிகளில் ஒருவரான Eleni Zaggelidou, 57 சிதைந்த உடல்களில் இருந்து DNA மாதிரிகள் எடுக்கப்பட்டதாக கூறினார். இதற்கிடையில், 2000களில் கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடியின் போது சிக்கன நடவடிக்கைகள் ரயில்வேயில் முதலீடு இல்லாததற்கு பங்களித்ததாக அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறினார். பேரிடரைத் தொடர்ந்து, அரசு புறக்கணிப்பைக் கண்டித்து […]

error: Content is protected !!