பேருந்தில் 4 இளம் பெண்களின் அட்டகாசம்: மது போத்தலால் பயணியை பதம்பார்த்த கொடூரம்!
தென் லண்டன் பேருந்து ஒன்றில் நள்ளிரவில் நான்கு பெண்கள் பயணிகள் இருவரை மது போத்தலால் சரமாரியாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நான்கு இளம்பெண்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், தற்போது பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். கொடூர தாக்குதலுக்கு இலக்கான ஆண் மற்றும் பெண் பயணிகள் இருவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, மார்ச் 25ம் திகதி அந்த நான்கு இளம்பெண்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பெண் பயணி ஒருவரை […]













