பெலாரசை அணு ஆயுதப் பணயக் கைதியாக வைத்திருக்கும் ரஷ்யா!
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் முக்கிய பகுதிகளை கைப்பற்றி ரஷியா தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்துகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருவதால் போர் நீடிக்கிறது. இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் நட்பு நாடான பெலாரசில் முக்கியமான அணு ஆயுதங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நானும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் […]













