ராகுல் காந்தி பதவி நீக்கம்; லண்டனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு(52) குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது MP பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள். தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிட பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் […]













