இங்கிலாந்து உள்ளுராட்சி மன்ற தேர்தல் : தோல்வியை தழுவிய ஆளும் கட்சி!
இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அதிக ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டனின் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி பாரிய தோல்விளைத் தழுவியுள்ளது. இங்கிலாந்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனாக் கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் அவரின் கட்சி எதிர்கொண்ட முக்கிய தேர்தல் இதுவாகும். வெள்ளிக்கிழமை முதல் வெளியான பெறுபேறுகளின்படி பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான ஆளும் பழைமைவாதக் கட்சி 40 இற்கும் அதிகமான […]













