பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது திடீர் தாக்குதல்; 15 பேர் காயம்
பாகிஸ்தானில் பஞ்சாப் பல்கலை கழகத்தில் படித்து வரும் இந்து மாணவர்கள் சிலர் புதிய வளாகத்திற்கு வெளியே நேற்று ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஹோலி கொண்டாட வரும்படி பேஸ்புக்கிலும் அழைப்புகள் பகிரப்பட்டு உள்ளன. இந்நிலையில், இதனை கவனித்து இஸ்லாமி ஜமியாத் துல்பா (IJD) அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அந்த பகுதிக்கு வந்து உள்ளனர். அவர்களில் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் தடியுடன் காணப்பட்டனர். ஹோலி கொண்டாடிய மாணவர்கள் மீது அவர்கள் திடீரென கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.இதுபற்றிய […]













